முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கபீம் குபாம் கீச்சுக்கள்

ஊரடங்கு காலத்தில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என எண்ணம் தலைதூக்கியதில் மின்னூல் வெளியிடும் எண்ணம் உருவானது. இந் நூல் கிண்டில் அன்லிமிட்டெடில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. நன்றி. நூலுக்கான‌ லிங்க் https://www.amazon.in/dp/B08817Y63B
சமீபத்திய இடுகைகள்

பெரிதினும் பெரிது கேள்!

       போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழைய வாக்கு.யாரு சார் இப்ப போதும்னெல்லாம் நினைக்கிறாங்க? அத்தனைக்கும் ஆசைப்படு,பெரிதினும் பெரிது கேள்,திங்க் பிக் இப்படித்தானே எல்லோரும் சொல்லிட்டிருக்காங்க. கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடங்கி நிறைய பெரிதினும் பெரிதுகள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.           மிஷ்கின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பர்த்ததாகவும் நந்தலாலா படத்தின் இசையை 10000 முறை கேட்டதாகவும்,50000 புத்தகங்களை வாசித்ததாகவும்,பீத்தோவனின் சிம்பொனி இசையை 1000 முறை கேட்டதாகவும் சொல்கிறார்.இது பெரிதினும் பெரிதினும் பெரிது என்றுதான் தோன்றுகிறது.   தமிழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு காணொளியில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு 17 ஆயிரம் அத்தைகள் இருந்ததாகவும்,ராஜு முருகனுக்கு 106 சித்திகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ஆல‌ம் விழுதுகள் போல்உறவு 'ஆயிரம்' வந்தும் என்ன' என்று கண்ணதாசன் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் பாடியிருக்கிறார். அதனுடைய நீட்சியாகத்தான் இது என்று ஐயமுற வேண்டியிருக்கிறது. வட சென்னை பாணியில் சொன்னால்

ஹெலென்

இன்று ஹெலென் என்று ஒரு மலையாள‌ப்படம் கண்டு… எளிமையான கதைதான்..ஆனால் நெஞ்சை உறைய வைக்கும் கதை.. ஃப்ரீசரில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்குட்டியின் கதையை அப்ப்டித்தானே கூறவேண்டும். கண்களில், கன‌டா கனவுகளோடு chicken hub ல் வேலை செய்யும் செவிலி பாத்திரம் கதாநாயகிக்கு. 'ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது.ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு,திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம்' என்பது பிரபல விஞ்ஞானி ஹெலன் கெல்லர் அருளியது. இந்த ஹெலனோ,மற்றொரு கதவு திறக்க வாய்ப்பில்லாத,ஒரே கதவுள்ள கோழி இறைச்சியைச் சேமித்துவைக்கும் ஃப்ரீசரில் (ஜில்லறை?!) மாட்டிக்கொள்ளுகிறார்.அவரைக் காணாமல் அவரது தந்தையும் காதலரும் தேடுவதும்,அந்த ஜில்லறையிலிருந்து அவர் மீள முயல்வதும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. ஹெலெனின் அப்பா (லால்) யாரென்று பார்த்தால் அவர் ஏற்கனவே இது போன்று 'ஷட்டர்' ஒன்றில் சிக்கித் தவித்து வெளிவந்தவர். அப்படியாகப்பட்டவர் தன் மகளுக்கு இது போன்ற சூழ்நிலை வராமல் காப்பது,அல்ல்து அதனை எதிர்கொள்ளும் பேரிடர் மேலாண்மையைத் தன் மகளுக

ஆன்லைன் அர்த்தநாரிகள் #FaceApp #ஃபேஸ்ஆப்

         2016 இருந்தே நடைமுறையில் இருக்கிறது என்றாலும் ஃபேஸ்ஆப் செயலி தற்போது மிகப் பிரபலமாய் ஆகியிருக்கிறது.விழித்திருப்பது ம்,விலகியிருப்பதும்,வீட்டிலிரு ப்பதும்  சிலநேரம் வெட்டியாய் இருப்பதும் இந்தச்செயலியைப் பிரபலப்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையன்று.     நாம் இப்போதிருக்கும் நிலையிலிருந்து இளமையாக, முதுமையாக, பெண்ணாக,ஆணாக உருமாறினால் எப்படி இருப்போம் என்பதன் டிஜிட்டல் கற்பனைதான் இது. அதிலும் ஆணாக இருந்துகொண்டு பெண்ணாக மாறும் கற்பனை, பெரும்பாலானவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. பெண்குழந்தை இல்லாவிட்டால் ஆண்குழந்தைக்கு அரிதாரம் பூசி,பெண்குழந்தைபோல தோன்றச்செய்து மகிழும் ஆதிகால வழக்கத்தின் ஆண்ட்ராய்டு தொடர்ச்சியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும்.        ஆண்கள் தங்களை பெண்ணாக கற்பனை செய்வது புதிதல்ல.தன்னை பெண்ணாகப் பாவித்து மாணிக்கவாசகர் மாம்ஸ் கூட சிவன்மீதுள்ள பிரியத்தை திருவெம்பாவையாக பாடியிருக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்!பெண்ணின் பெயரைப் புனைப் பெயராகக் கொண்ட பிரபலமான ஆண் எழுத்தாளர்களான சுஜாதா உள்ளிட்ட‌ பலரை நாம் அறிவோம்.அப்படி ஒரு கலாச்சாரத்தின் தொடர

ஷாப்பிங் 'மால்'

ஷாப்பிங் 'மால்' (இது செப்டம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு விகடன் குழும இதழ்களில் ஒன்றாக இருந்த டைம்பாஸ் இதழில் வெளியானது.)ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் என்ற செய்தி இப்பொழுது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த்திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள்.இப்பொழுதுதான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது.இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை.  டாஸ்மாக்ல இருக்குறப்போ போன் வந்தா  என்ன சொல்றதுன்னு?  எல்லோரும் பயப்படுவாங்க,யோசிப்பாங்க... இப்ப அந்த கவலை இல்ல.. ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு யோசிக்காம சொல்லிக்கலாம்.   டாஸ்மாக் பாரை தரைத்தளத்தில் அமைப்பது நலம்.ஏனெனில் உயரமான இடத்தில் வைத்தால் குடிமகன்கள் இறங்கிவரும்போது போதையும் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது!   ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆங்கிலம் தெரியவில்லை எனு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும்பங்கு வகிக்கிறது.எனவே,அத்தகையவர்கள

ஒற்றைப்பாத்திர சமையல்

        தொலைக்காட்சியில்,இணைய வெளிகளில் சமையல் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடங்கும் பொழுது ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே துவங்கும். பலருக்கும் சமையலின்மேல் வெறுப்பைத் தருவதற்கு இந்த வாக்கியம் போதுமானது என்றால் அது மிகையாகாது.பாத்திரங்களைக் கழுவுவதுதான் அத்தகைய சிரமத்தைப் பலருக்கும் கொடுத்திருக்கிறது.பத்து நிமிடம் சமைப்பதற்காக, பல‌மணிநேரம் பத்துப் நம் நாட்டில் உண்டு என்பதை நாம் அறிவோம். இதற்குப் பயந்தே,உங்க‌ பொங்கச்சோறும் வேண்டாம்,பூசாரித்தனமும் வேண்டாம் என்று சமைக்கவே பலர் அஞ்சுகின்றனர்.            சோம்பல்கொண்ட அனைவருக்கும், குறிப்பாக பேச்சிலர்கள்,வீட்டைவிட்டு வெளியில் வந்து தங்கிப் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் போன்றவர்களை மகிழ்ச்சியடையவைக்கவும் சமையல் வேலைகளை எளிதாக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சிதான் ஒன்பாட்குக்கிங் எனப்படும் ஒற்றைப்பாத்திர சமையல்.இது ஒன்பாட் ஒன்ஷாட் சமையல் என்ற பெயரிலும் தற்போது பிரபலாமாகி வருகிறது.             என்னதான் ஒரு பாத்திரத்தை வைத்துச் சமைத்தாலும்,அதைக்கழுவும்போது அதைப் பத்துப்பாத்திரம் தேய்க்கிறேன் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு விஷயம்.

கோண கொண்டைக்காரி Vs அண்டங்காக்கா கொண்டைக்காரி

கொண்டை என்பது என்ன? பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை ஒற்றைக் கற்றையாய்ப் பிடித்து,சிறுவட்டமாய்ச் சுற்றி செய்யப்படும் ஒரு சிகை அலங்காரம். கொண்டையில் பன்கொண்டை,கொட்டாங்குச்சி கொண்டை, வளையல் கொண்டை என பல்வேறு வகைகள் உள்ளன.மாடர்ன் மங்கையர் யாரும் இச்சிகையலங்காரத்தைச் செய்வதில்லை என்றாலும் வயதானவர்களில் கொண்டை இடாதவர்களைக் காணமுடியாது. கொண்டை ஊசிகள், ரப்பர்பேண்ட்கள் என எதுவும் தேவையில்லாமல் கையாலேயே செய்யக்கூடிய எளிமையான சிகையலங்காரம்தான் இது என்பதை மறுப்பதற்கில்லை          கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும்கிளி கையில்வைத்து என்று மதுரை மீனாட்சியை வர்ணித்து பாடும் பக்திப் பாடலை அனைவரும் அறிந்திருக்கிறோம்.பெண்ணிற்கு அழகு சேர்ப்பதில் கொண்டைக்கு உண்டு பெரும்பங்கு.தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியான இரண்டு வகை கொண்டைகளை உடைய பெண்ணைப் பற்றிய பாடல்களைத்தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம். மதயானைக் கூட்டம் படத்தில் இடம்பெற்ற கோண கொண்டைக்காரி பாடலும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலும்தான் அவை. கோண கொண்டைக்காரி என்பது ஒரு சாய்ந்த நிலையிலிருக்கும