முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒற்றைப்பாத்திர சமையல்

        தொலைக்காட்சியில்,இணைய வெளிகளில் சமையல் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடங்கும் பொழுது ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே துவங்கும். பலருக்கும் சமையலின்மேல் வெறுப்பைத் தருவதற்கு இந்த வாக்கியம் போதுமானது என்றால் அது மிகையாகாது.பாத்திரங்களைக் கழுவுவதுதான் அத்தகைய சிரமத்தைப் பலருக்கும் கொடுத்திருக்கிறது.பத்து நிமிடம் சமைப்பதற்காக, பல‌மணிநேரம் பத்துப் நம் நாட்டில் உண்டு என்பதை நாம் அறிவோம். இதற்குப் பயந்தே,உங்க‌ பொங்கச்சோறும் வேண்டாம்,பூசாரித்தனமும் வேண்டாம் என்று சமைக்கவே பலர் அஞ்சுகின்றனர்.

           சோம்பல்கொண்ட அனைவருக்கும், குறிப்பாக பேச்சிலர்கள்,வீட்டைவிட்டு வெளியில் வந்து தங்கிப் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் போன்றவர்களை மகிழ்ச்சியடையவைக்கவும் சமையல் வேலைகளை எளிதாக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சிதான் ஒன்பாட்குக்கிங் எனப்படும் ஒற்றைப்பாத்திர சமையல்.இது ஒன்பாட் ஒன்ஷாட் சமையல் என்ற பெயரிலும் தற்போது பிரபலாமாகி வருகிறது.

            என்னதான் ஒரு பாத்திரத்தை வைத்துச் சமைத்தாலும்,அதைக்கழுவும்போது அதைப் பத்துப்பாத்திரம் தேய்க்கிறேன் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு விஷயம். நாடு இப்போது எதிர்நோக்கி இருக்கும் தண்ணீர்ப்பஞ்சத்தில் நாம் கழுவ வேண்டியது பத்துப்பாத்திரத்தை அல்ல,ஒற்றைப்பாத்திரத்தையே. தண்ணீர் சிக்கனம்,வேலைப்பளு குறைதல் போன்ற காரணங்களால் இவ்வகைச் சமையல் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.கவ‌னத்தில் கொள்ளுங்கள் ஒரு சிறிய உபரிப் பாத்திரமும் உங்களுக்கு உபத்ரவத்தை உண்டாக்கலாம்.

ஒன்பாட் குக்கிங் சமையல் ஒரு பாத்திரத்தைக் கொண்டே செய்யப்படுகிறது. அந்தப் பாத்திரம் குக்கராக இருக்கலாம்,வாண‌லியாக,கடாயாகவும் இருக்கலாம்.ஒரு பாத்திரம்தானே, சுவை எப்படி இருக்குமோ என அஞ்சத் தேவையில்லை.பல்வேறு பாத்திரங்களை பயன்படுத்தி சுவைப்பதன் சுவையை விஞ்சும் அளவிற்கு கூட சமைக்கலாம் எனும் அளவிற்கு இவ்வகைச்சமையல் வளர்ந்துள்ளது. கொஞ்சம் மெனக்கெடலும், நேரமும்,ஆர்வமும்,பொறுமையும், திறமையும் இருந்தால் நன்றாக சுவையாகவே சமைக்கலாம்.

             சாம்பார்சாதம்,ரசம்சாதம்,புளிசாதம்,கீரைசாதம்,பொங்கல், புலாவ்,பிசிபேளாபாத்,பிரியாணி என எண்ணற்ற உணவுவகைகள் இதன் மூலம் தயார் செய்யலாம். அரிசி,பருப்பு,மசாலா, காய்கறி என சமையலுக்குத் தேவையான எல்லாமே ஒரே பாத்திரத்தில் சேர்த்து செய்யப்படுகிறது.சமையலுக்கு நறுமணமும் சுவையும் கொடுக்கும் தாளித்தல் கூட ஒரே பாத்திரத்தில்தான்.குறைவான நேரத்தில் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்தாமல் நிறைவான உணவு சமைக்க இம்முறையைப் பலரும் பயன்படுத்துகின்றனர்.

                சமையலுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் சேகரித்து,அதை சரியான விதத்தில்,சரியான விகிதத்தில்,சரியான நேரத்தில் செய்வதே ருசியான உணவின் சூட்சுமம். சாம்பார் சாதம் வீட்டில் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.சோறு சமைக்க,சாம்பார் சமைக்க,தாளிக்க‌ என பல்வேறு பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த வகையில் ஒரே ஒரு பாத்திரத்தில் சமையல் முடிந்துவிடுகிறது.ஒரே பாத்திரம் ஓஹோன்னு சமையல் என்பதுதான் இதுதான் இச்சமையலின் சிறப்பம்சம்.

         ஒற்றை பாத்திரம் சமையலுக்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது குக்கர்தான். போரடிக்காத இந்த வகைச் சமையல் ஒரு போர் எனில் குக்கர்தான் ஒன்மேன் ஆர்மி.எனவே நல்ல தரமான குக்கராக தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். கேஸ்கட் எனப்படும் அழுத்தக்காப்பு அல்லது இணைப்பிருக்கி சரியான முறையில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்துவதே ஒரு பாத்திரம்தான். அது நல்ல பாத்திரமாக இருக்க வேண்டுமல்லவா?

            குக்கர் எந்தவகை உலோகத்தால் செய்யப்பட்டது,அதன் கொள்ளளவு போன்றவற்றை கவனத்தில் கொண்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.கேஸ்கட்,விசில் போன்றவை நன்றாய் இருக்கிறதா என சோதித்துக்கொள்ள வேண்டும். எனவே கூறுகெட்ட குக்கர்கள் இருப்பின் அதைச் சரிசெய்து கொள்வது அவசியம்.சைவம், அசைவம் என சகலமும் சமைக்க உகந்ததே ஒற்றைப்பாத்திரச் சமையல்.எனவே கூறுகெட்ட குக்கர்கள் இருப்பின் அதைச் சரிசெய்து கொள்வது அவசியம்.

             ஒற்றைப்பாத்திரச் சமையலில் நமது நேரம் மிச்சமாகிறது. அதை நாம் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு பயன்படுத்தலாம் அதாகப்பட்டது சோறு ஆக்க ஆகும் நேரம் ஆக்கப்பூர்வமான நேரமாகிறது. ஏனெனில் பரபரப்பான இந்த வாழ்க்கையில் பாதி நேரம் சமையலறையிலேயே கழிந்துவிடக்கூடாது.உங்களுக்கே உங்களுக்கு என்று அந்த நேரத்தை மனதிற்குப் பிடித்த மற்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

          பல பாத்திரங்களைப் பயன்படுத்திச் சமைப்பதால் நேரவிரயம் மட்டுமல்ல, சாப்பிட்ட பின் அதைக் கழுவுவதனால் ஏகப்பட்ட தண்ணீரும் விரயமாகிறது. இந்த வகையில் பார்த்தால் ஒற்றைப்பாத்திர சமையல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதை மறுப்பதற்கில்லை.இவ்வகைச் சமையலைக் கற்றுக்கொள்ள இணையத்தில் ஒன்பாட் குக்கிங்,ஒன்பாட் ஒன்ஷாட்,ஒன்கப் குக்கிங் என்று ஏகப்பட்ட சமையல் செய்முறைகள் கொட்டிக்கிடக்கின்றன.சைவ,அசைவம் என அனைத்து வகைகளும் சைட் டிஷ்,மெயின் டிஷ் என சகலமும் இந்த வகையில் செய்யலாம்.

             சமையல் சுத்தமாக தெரியாதவர்கள்கூட சிறப்பாக சமையல் கற்றுக்கொள்ள ஏகப்பட்ட யூட்யூப் சேன‌ல்கள் இருக்கின்றன.பேச்சிலர்க்குக் கிடைத்த பேருதவி என இவ்வகைச் சமையலைக் கூறலாம்.மனதுக்குப் பிடித்தமான‌வர்களுக்கு சமைப்பதை பார்த்துப் பார்த்துச் சமைத்தேன் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். தற்போதைய நிலையில் பார்த்துப் பார்த்துச் சமைத்தேன் எனும்போது யூட்யூபையா என்று கேட்கத்தோன்றுகிறது. நன்றாய்ச் சமையுங்கள்.. ஜமாயுங்கள்.. முதலில் உங்கள் குக்கர் விசில் அடிக்கும் பின்னர் அதை உண்டவர்கள் விசில் அடிப்பார்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்க ஊரும்......செல்போனும்.......

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் ( தி கிரேட் தேத்தாகுடி ,வேதாரண்யம் ) உலவத் தொடங்கியது . அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள் , விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............ எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே .பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது .. அதை அவர்கள் , என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர் . எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை ஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர். அருகில் டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை . விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி , வெட்ட வெளிகளில் சிக்னல் பெற்றனர் .

ஷாப்பிங் 'மால்'

ஷாப்பிங் 'மால்' (இது செப்டம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு விகடன் குழும இதழ்களில் ஒன்றாக இருந்த டைம்பாஸ் இதழில் வெளியானது.)ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் என்ற செய்தி இப்பொழுது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த்திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள்.இப்பொழுதுதான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது.இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை.  டாஸ்மாக்ல இருக்குறப்போ போன் வந்தா  என்ன சொல்றதுன்னு?  எல்லோரும் பயப்படுவாங்க,யோசிப்பாங்க... இப்ப அந்த கவலை இல்ல.. ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு யோசிக்காம சொல்லிக்கலாம்.   டாஸ்மாக் பாரை தரைத்தளத்தில் அமைப்பது நலம்.ஏனெனில் உயரமான இடத்தில் வைத்தால் குடிமகன்கள் இறங்கிவரும்போது போதையும் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது!   ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆங்கிலம் தெரியவில்லை எனு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும்பங்கு வகிக்கிறது.எனவே,அத்தகையவர்கள