முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹெலென்

encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ...
இன்று ஹெலென் என்று ஒரு மலையாள‌ப்படம் கண்டு…

எளிமையான கதைதான்..ஆனால் நெஞ்சை உறைய வைக்கும் கதை.. ஃப்ரீசரில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்குட்டியின் கதையை அப்ப்டித்தானே கூறவேண்டும்.

கண்களில், கன‌டா கனவுகளோடு chicken hub ல் வேலை செய்யும் செவிலி பாத்திரம் கதாநாயகிக்கு.

'ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது.ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு,திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம்' என்பது பிரபல விஞ்ஞானி ஹெலன் கெல்லர் அருளியது.

இந்த ஹெலனோ,மற்றொரு கதவு திறக்க வாய்ப்பில்லாத,ஒரே கதவுள்ள கோழி இறைச்சியைச் சேமித்துவைக்கும் ஃப்ரீசரில் (ஜில்லறை?!) மாட்டிக்கொள்ளுகிறார்.அவரைக் காணாமல் அவரது தந்தையும் காதலரும் தேடுவதும்,அந்த ஜில்லறையிலிருந்து அவர் மீள முயல்வதும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

ஹெலெனின் அப்பா (லால்) யாரென்று பார்த்தால் அவர் ஏற்கனவே
இது போன்று 'ஷட்டர்' ஒன்றில் சிக்கித் தவித்து வெளிவந்தவர். அப்படியாகப்பட்டவர் தன் மகளுக்கு இது போன்ற சூழ்நிலை வராமல் காப்பது,அல்ல்து அதனை எதிர்கொள்ளும் பேரிடர் மேலாண்மையைத் தன் மகளுக்கு சொல்லித்தந்திருக்கவேண்டும்.(பறைஞ்ஜுகொடுத்தாலும் மதி)

பட்ட காலிலே படும் என்று ஒரு பழமொழி உண்டல்லவா?அடுத்த தலைமுறைக்கு இது நிகழலாகாது .அதனால் ஹெலென் தன் குழந்தைக்கு இது போன்றதொரு இடர் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ள‌வேண்டும்!

நன்றி
பட உதவி:கூகுள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்க ஊரும்......செல்போனும்.......

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் ( தி கிரேட் தேத்தாகுடி ,வேதாரண்யம் ) உலவத் தொடங்கியது . அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள் , விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............ எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே .பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது .. அதை அவர்கள் , என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர் . எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை ஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர். அருகில் டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை . விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி , வெட்ட வெளிகளில் சிக்னல் பெற்றனர் .

ஷாப்பிங் 'மால்'

ஷாப்பிங் 'மால்' (இது செப்டம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு விகடன் குழும இதழ்களில் ஒன்றாக இருந்த டைம்பாஸ் இதழில் வெளியானது.)ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் என்ற செய்தி இப்பொழுது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த்திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள்.இப்பொழுதுதான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது.இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை.  டாஸ்மாக்ல இருக்குறப்போ போன் வந்தா  என்ன சொல்றதுன்னு?  எல்லோரும் பயப்படுவாங்க,யோசிப்பாங்க... இப்ப அந்த கவலை இல்ல.. ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு யோசிக்காம சொல்லிக்கலாம்.   டாஸ்மாக் பாரை தரைத்தளத்தில் அமைப்பது நலம்.ஏனெனில் உயரமான இடத்தில் வைத்தால் குடிமகன்கள் இறங்கிவரும்போது போதையும் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது!   ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆங்கிலம் தெரியவில்லை எனு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும்பங்கு வகிக்கிறது.எனவே,அத்தகையவர்கள

ஒற்றைப்பாத்திர சமையல்

        தொலைக்காட்சியில்,இணைய வெளிகளில் சமையல் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடங்கும் பொழுது ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே துவங்கும். பலருக்கும் சமையலின்மேல் வெறுப்பைத் தருவதற்கு இந்த வாக்கியம் போதுமானது என்றால் அது மிகையாகாது.பாத்திரங்களைக் கழுவுவதுதான் அத்தகைய சிரமத்தைப் பலருக்கும் கொடுத்திருக்கிறது.பத்து நிமிடம் சமைப்பதற்காக, பல‌மணிநேரம் பத்துப் நம் நாட்டில் உண்டு என்பதை நாம் அறிவோம். இதற்குப் பயந்தே,உங்க‌ பொங்கச்சோறும் வேண்டாம்,பூசாரித்தனமும் வேண்டாம் என்று சமைக்கவே பலர் அஞ்சுகின்றனர்.            சோம்பல்கொண்ட அனைவருக்கும், குறிப்பாக பேச்சிலர்கள்,வீட்டைவிட்டு வெளியில் வந்து தங்கிப் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் போன்றவர்களை மகிழ்ச்சியடையவைக்கவும் சமையல் வேலைகளை எளிதாக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சிதான் ஒன்பாட்குக்கிங் எனப்படும் ஒற்றைப்பாத்திர சமையல்.இது ஒன்பாட் ஒன்ஷாட் சமையல் என்ற பெயரிலும் தற்போது பிரபலாமாகி வருகிறது.             என்னதான் ஒரு பாத்திரத்தை வைத்துச் சமைத்தாலும்,அதைக்கழுவும்போது அதைப் பத்துப்பாத்திரம் தேய்க்கிறேன் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு விஷயம்.