முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மிலிட்டரி ஹோட்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

மிலிட்டரி ஹோட்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து மிலிட்டரி அல்லது ஆர்மி அல்லது பட்டாளத்து வேலைக்காக சென்றவர்கள் அங்கு நம்  ஊர் உணவுகளான இட்லி தோசைகளை மறந்து சப்பாத்தி பராத்தா இவற்றை வேறுவழியின்றி உண்டு வந்தனர்.அசைவ உணவுகளோடு அதன் சேர்க்கையை ரசிக்கத் தொடங்கி, நாளடைவில் அவற்றை விரும்பி உண்ணவும் தொடங்கினார்கள்.யாம் பெற்ற இன்பம்  இவ் வையகம் பெறவேண்டி பலர் அவ்வகை உணவுகளை சமைக்கவும் கற்றுக்கொண்டனர்.     அந்தக் காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன.அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின. துப்பாக்கி சுடத் தெரியாத மிலிட்டரிகாரர் தான் பட்டாளத்தில் சப்பாத்தி சுட்டதாக சொல்லும் காமெடி இதன் நீட்சியாக இருக்கக்கூடும்.    மிலிட்டரிக்காரர்கள் இள வயதிலேயே அதாவது 40,45 போன்ற வயதுகளில் ஓய்வு பெறுபவர்கள். ஊர்வந்த பிறகு ஓய்வில் என்ன செய்யலாம்? என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கையில