முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிதினும் பெரிது கேள்!



       போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழைய வாக்கு.யாரு சார் இப்ப போதும்னெல்லாம் நினைக்கிறாங்க? அத்தனைக்கும் ஆசைப்படு,பெரிதினும் பெரிது கேள்,திங்க் பிக் இப்படித்தானே எல்லோரும் சொல்லிட்டிருக்காங்க.
கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடங்கி நிறைய பெரிதினும் பெரிதுகள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.

          மிஷ்கின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பர்த்ததாகவும் நந்தலாலா படத்தின் இசையை 10000 முறை கேட்டதாகவும்,50000 புத்தகங்களை வாசித்ததாகவும்,பீத்தோவனின் சிம்பொனி இசையை 1000 முறை கேட்டதாகவும் சொல்கிறார்.இது பெரிதினும் பெரிதினும் பெரிது என்றுதான் தோன்றுகிறது. 

 தமிழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு காணொளியில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு 17 ஆயிரம் அத்தைகள் இருந்ததாகவும்,ராஜு முருகனுக்கு 106 சித்திகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ஆல‌ம் விழுதுகள் போல்உறவு 'ஆயிரம்' வந்தும் என்ன' என்று கண்ணதாசன் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் பாடியிருக்கிறார். அதனுடைய நீட்சியாகத்தான் இது என்று ஐயமுற வேண்டியிருக்கிறது.

வட சென்னை பாணியில் சொன்னால் நா.மு,ரா மு,மிஷ்கின் இவங்களையெல்லாம் இணைப்பது இவங்க எல்லோருக்கும் நண்பரா இருக்கிற‌ பவா செல்லத்துரை என்றால் அது மிகையன்று.ஆனால் அவரை மிஞ்சும் 'கதை' சொல்லி ஒருவர் இருக்கிறார்.இந்த நம்பர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அவர்தான் மதுவதந்தி.

அவர் உஜ்வாலா' திட்டத்தின் கீழ் 8,000 கோடி மக்களுக்கு ரூ.5000 கோடி ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில்  பிரதமர் மோடி செலுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார். இதைப் பெரிதினும் பெரிது கேட்பதன் உச்சமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி தான். உலகம் முழுக்க மக்கள் தொகையை கூட்டினால் கூட 8,000 கோடி வராது. மதுவந்தி சொல்வது போல் 8000 கோடி பேருக்கு 5000 கோடி என்றால் ஒரு ஆளுக்கு 62 பைசாதான் வரும், முழுதாய் ஒரு ரூபாய் கூட வராது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிதினும் பெரிதினும் கேட்பது என்பது ஒரு கனவாய் இருக்கலாம் அல்லது நனவாக விரும்பும் கனவின் வெளிப்பாடாய் இருக்கலாம்.பெரிதாய்ச் சிந்தியுங்கள்..கனவு காணுங்கள்,இன்றோ,நாளையோ அல்லது என்றோ ஒரு மழை பெய்யும் மதியப்பொழுதிலோ அல்லது சுட்டெரிக்கும் சுடுவெயில் நாளிலோ என்றோ ஒரு நாள் சர்வ நிச்சயமாய் அது நனவாகும். அப்படி இல்லையென்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகப்போவதில்லை இன்னும் பெரிதாய் அடுத்த கனவைக் காண்போம்!








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்க ஊரும்......செல்போனும்.......

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் ( தி கிரேட் தேத்தாகுடி ,வேதாரண்யம் ) உலவத் தொடங்கியது . அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள் , விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............ எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே .பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது .. அதை அவர்கள் , என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர் . எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை ஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர். அருகில் டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை . விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி , வெட்ட வெளிகளில் சிக்னல் பெற்றனர் .

ஷாப்பிங் 'மால்'

ஷாப்பிங் 'மால்' (இது செப்டம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு விகடன் குழும இதழ்களில் ஒன்றாக இருந்த டைம்பாஸ் இதழில் வெளியானது.)ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் என்ற செய்தி இப்பொழுது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த்திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள்.இப்பொழுதுதான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது.இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை.  டாஸ்மாக்ல இருக்குறப்போ போன் வந்தா  என்ன சொல்றதுன்னு?  எல்லோரும் பயப்படுவாங்க,யோசிப்பாங்க... இப்ப அந்த கவலை இல்ல.. ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு யோசிக்காம சொல்லிக்கலாம்.   டாஸ்மாக் பாரை தரைத்தளத்தில் அமைப்பது நலம்.ஏனெனில் உயரமான இடத்தில் வைத்தால் குடிமகன்கள் இறங்கிவரும்போது போதையும் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது!   ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆங்கிலம் தெரியவில்லை எனு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும்பங்கு வகிக்கிறது.எனவே,அத்தகையவர்கள

ஒற்றைப்பாத்திர சமையல்

        தொலைக்காட்சியில்,இணைய வெளிகளில் சமையல் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடங்கும் பொழுது ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே துவங்கும். பலருக்கும் சமையலின்மேல் வெறுப்பைத் தருவதற்கு இந்த வாக்கியம் போதுமானது என்றால் அது மிகையாகாது.பாத்திரங்களைக் கழுவுவதுதான் அத்தகைய சிரமத்தைப் பலருக்கும் கொடுத்திருக்கிறது.பத்து நிமிடம் சமைப்பதற்காக, பல‌மணிநேரம் பத்துப் நம் நாட்டில் உண்டு என்பதை நாம் அறிவோம். இதற்குப் பயந்தே,உங்க‌ பொங்கச்சோறும் வேண்டாம்,பூசாரித்தனமும் வேண்டாம் என்று சமைக்கவே பலர் அஞ்சுகின்றனர்.            சோம்பல்கொண்ட அனைவருக்கும், குறிப்பாக பேச்சிலர்கள்,வீட்டைவிட்டு வெளியில் வந்து தங்கிப் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் போன்றவர்களை மகிழ்ச்சியடையவைக்கவும் சமையல் வேலைகளை எளிதாக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சிதான் ஒன்பாட்குக்கிங் எனப்படும் ஒற்றைப்பாத்திர சமையல்.இது ஒன்பாட் ஒன்ஷாட் சமையல் என்ற பெயரிலும் தற்போது பிரபலாமாகி வருகிறது.             என்னதான் ஒரு பாத்திரத்தை வைத்துச் சமைத்தாலும்,அதைக்கழுவும்போது அதைப் பத்துப்பாத்திரம் தேய்க்கிறேன் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு விஷயம்.