முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்க ஊரும்......செல்போனும்.......



நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் (தி கிரேட் தேத்தாகுடி,வேதாரண்யம் ) உலவத்தொடங்கியது.அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள், விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............

எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே.பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது ..அதை அவர்கள்,என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர்.

எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லைஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர்.

அருகில்
டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை.விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி,வெட்ட வெளிகளில்சிக்னல்பெற்றனர்.

சிலர்
அது பேச மட்டுமே என்பதில் உறுதியாய் இருந்தனர். அவர்கள் நோகியா டோன், புல் வால்யூம் பிரிவினராவர். விமல்ராஜ் தன் சொந்த முயற்சியால் அதில் ரிங்க்டோன்களை இசைத்து மக்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.கால்குலேட்டர் இருப்பதும் பின்னாளில் கண்டறிந்து கணக்கிட்டு மகிழ்ந்தனர்.இரண்டு போனர்கள்(போன்+ஓனர் ) சந்தித்தால் தங்களுக்குள் ரிங்க்டோன்கள், படங்கள் பரிமாறினர்.


இந்நிலையில்தான் கேமரா மொபைல் ஒன்று சவுதியில் இருந்து கொணரப்பட்டது,அறிவு என்கிற அறிவழகனால் . வீட்டுக்கு போன் செய்து சிலர் அறிவு இல்லையா என்று கேட்பதாலேயே அவர் தனிப்பேசி வாங்கத் தலைப்பட்டார்.
ஊரின் முதல் வண்ணத் தொலைபேசியும் அதுவே.

இருந்தும்
அவர் சிக்னல் பெற கடும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருந்தது.கருப்பு வெள்ளைக்கு கிட்டிய சிக்னல் கலருக்கு வர மறுத்தது.போனைத் துணியில் கட்டி கொடிஎற்றலானார்.துணிகர முடிவு என்று இதைச் சொல்லலாம்.இதை வேடிக்கை பார்த்த சிறுசுகளுக்கு பாரின் மிட்டாய் கொடுத்து , இந்திய சுதந்திரத்தை நினைவூட்டினார்.

போன் அடிக்கும் பட்சம் அவர் அரைக்கம்பம் இறக்கும்போதே கால் கட் ஆகி அவரைச் சோதித்தது.அரைக்கம்பம்,மரணம் இரண்டையும் ஒப்பிட்டு,இது நம்ம தப்போ என்று அவர் சமாதானம் அடைந்தார்.அதனால்தான் அது தவறிய அழைப்போ என்று கூட ஒருகணம் யோசித்தார்.

விளையாட்டுத்திடலில் சிக்னல் கிடைப்பதால் கையோடு போனை எடுத்துச் செல்வார்,கால் வரும் என்று.

போன் அடிக்கும் சப்தம் கேட்டால் சிலர் போன் அடிக்குது என்று கூறுகையில் அழகுதான் அவர்களைத் திருத்தினார்.அது இமேஜுக்கு(மெசேஜ்) வர்ற சவுண்டு என்று.அறிவு அழகைத் திருத்தவில்லை,அழகின் மெசேஜ் சாரி இமேஜ் ஸ்பாயில் ஆகிவிடும் என்பதால்.அறிவு போனைச் சோதித்து அதிர்ச்சியானார் அது பிக்சர் மெசேஜாக இருந்ததால்.

அதில் சிலர் அரபு நாட்டு போனுல தமிழ்ல பேச முடியுமா?என்று வியப்பில் ஆழ்த்தினர்.அவர் இங்க ஆடு கத்துற சவுண்ட் கூட அமெரிக்காவுல கேட்கும் என்று அவர்களைத் தேற்றினார்.

போனில் போட்டோ எடுத்து பார்க்கும் ஆர்வமுள்ள அனைவரையும் போட்டோ எடுத்தார்.அதில் இதுக்கு காசு எவளவு கட் ஆகும் என்று பன்னீர் வினவினார்.இது நம்மளுக்கு தோணலியே என்று வெட்கப்பட்டார் .அப்பனுக்கு பாடம் சொன்ன முருகனைப்போல் பன்னீரைப் பார்த்த அவர்,நாளைக்கு ரீசார்ஜ் பண்ணிட்டு வந்து எல்லோரையும் போட்டோ எடுக்கிறேன் என்று வீடு வந்து சேர்ந்தார்.

கோயில் இல்லா ஊரில் மட்டுமல்ல டவர் இல்லா ஊரிலும் குடியிருக்க வேண்டா என்று பழ மொழிகளையும் உல்டா செய்யலானார்.
பின்னாளில் போன் குறித்த ஐயங்களை தெளிவிக்கும் சக்தியாய் உருவெடுத்தார்.இப்பொழுது அவர் சில வினோதங்களைச் சந்திக்க நேர்ந்தது.

இந்த போனுல தமிழ்ல மெசேஜ் அனுப்ப முடியுமா?என்றதற்கு,தெரியல, ஆனா தமிழ்ல பேசலாம் என்றெல்லாம் கூறலானார்.

என் பேரை இதுல வரவைக்கனுமே எனும்போது ப்ரொபைலுக்கு அவர் நாமம் சூட்டி மகிழ்வித்தார்.
இப்பொழுதெல்லாம் அவர் போனை மிஞ்சும் அளவிற்கு போன்கள் ஊரில் உலவுகின்றன.ஊரிலே டவரும் வந்தது ,மிஸ்டு கால்,மெசேஜ்,வேலிடிட்டி,டாப் அப்,ரேட் கட்டர் எனும் வார்த்தைகள் ஊர்க்காற்றில் உலவுகின்றன.அனைவரும் தொடர்பு எல்லைக்கு உள்ளே வந்தனர்.

காவி படிந்த வெற்றிலை பாக்குப் பற்கள் இப்பொழுது புளுடூத்களைப் பற்றிப் பேசுகின்றன.காலேஜ் படிக்கும் பிள்ளைகளுக்கு ஊரில் இருந்தே ரீசார்ஜ் செய்யும் அப்பாக்கள் அதிகமாயினர்.

தவறான நம்பரில் வந்த கால்களையும் சரியான நம்பர்களாய் மாற்றும் சக்தியை சிலர் பெற்றனர்.கஸ்டமர் கேரின் பதிவு செய்த பெண்குரல் கேட்டே சிலர் மோட்சம் அடைந்தனர்.

சிலர் கடலை சாகுபடிக்கு மட்டும் என்று போர்டே போடுமளவிற்கு தீவிர சாகுபடியை போனிலே மேற்கொள்கின்றனர்.

நாய் விற்ற காசு குறைக்காது,ஆனால் கடலை விற்ற காசில் வாங்கிய போன்கள் அப்படியல்ல.

கடலைகள்,அப்பாக்களால் காட்டிலும்,பிள்ளைகளால் காற்றிலும் போடப்படுகின்றன.


(இந்த படைப்பு - யூத்ஃபுல் விகடனில் திங்கட்கிழமை (01.06.2009) வெளியிடப்பட்டது.
படிக்க கீழே சொடுக்கவும் )



கருத்துகள்

  1. sir,

    Ungala nenachale poorippa irukku.

    Ungal illakkiya payanam todara valthukkal.

    பதிலளிநீக்கு
  2. ha ha haaaa......
    ungaloda anha varthai vizhaiyattu rumbavum vithiyasama irruku.Vazhlga ungal tamil thoundu..
    A.Kesavan,
    Qatar.

    பதிலளிநீக்கு
  3. It is realy Amazing Arivu...
    Ungaludiya cell sevai thodara ennudiya manammarntha nandrikal......

    பதிலளிநீக்கு
  4. இது எழுதப்பட்ட காலத்தை வைத்துப்பார்க்கும் போது, அந்த காலத்திய மனநிலையில் கண்டிப்பாக இது ஒரு hilarious ஆர்ட்டிகிளாக இருந்திருக்குமென்பதில் ஐயமில்லை.

    புத்தகத்திலும் வந்திருப்பது மகிழ்வூட்டுகிறது.

    அதன் பிறகு ஏன் அதிகம் எழுதவில்லை.

    நீளத்தைக் குறைத்து ஏன் இன்னும் கொஞ்சம் நீங்கள் எழுதக்கூடாது?

    எதிர்பார்ப்புடன்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கபீம் குபாம் கீச்சுக்கள்

ஊரடங்கு காலத்தில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என எண்ணம் தலைதூக்கியதில் மின்னூல் வெளியிடும் எண்ணம் உருவானது. இந் நூல் கிண்டில் அன்லிமிட்டெடில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. நன்றி. நூலுக்கான‌ லிங்க் https://www.amazon.in/dp/B08817Y63B

ஷாப்பிங் 'மால்'

ஷாப்பிங் 'மால்' (இது செப்டம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு விகடன் குழும இதழ்களில் ஒன்றாக இருந்த டைம்பாஸ் இதழில் வெளியானது.)ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் என்ற செய்தி இப்பொழுது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த்திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள்.இப்பொழுதுதான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது.இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை.  டாஸ்மாக்ல இருக்குறப்போ போன் வந்தா  என்ன சொல்றதுன்னு?  எல்லோரும் பயப்படுவாங்க,யோசிப்பாங்க... இப்ப அந்த கவலை இல்ல.. ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு யோசிக்காம சொல்லிக்கலாம்.   டாஸ்மாக் பாரை தரைத்தளத்தில் அமைப்பது நலம்.ஏனெனில் உயரமான இடத்தில் வைத்தால் குடிமகன்கள் இறங்கிவரும்போது போதையும் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது!   ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆங்கிலம் தெரியவில்லை எனு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும்பங்கு வகிக்கிறது.எனவே,அத்தகையவர்கள...