முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிலிட்டரி ஹோட்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

மிலிட்டரி ஹோட்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?

ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து மிலிட்டரி அல்லது ஆர்மி அல்லது பட்டாளத்து வேலைக்காக சென்றவர்கள் அங்கு நம்  ஊர் உணவுகளான இட்லி தோசைகளை மறந்து சப்பாத்தி பராத்தா இவற்றை வேறுவழியின்றி உண்டு வந்தனர்.அசைவ உணவுகளோடு அதன் சேர்க்கையை ரசிக்கத் தொடங்கி, நாளடைவில் அவற்றை விரும்பி உண்ணவும் தொடங்கினார்கள்.யாம் பெற்ற இன்பம்  இவ் வையகம் பெறவேண்டி பலர் அவ்வகை உணவுகளை சமைக்கவும் கற்றுக்கொண்டனர்.
    அந்தக் காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன.அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின.

துப்பாக்கி சுடத் தெரியாத மிலிட்டரிகாரர் தான் பட்டாளத்தில் சப்பாத்தி சுட்டதாக சொல்லும் காமெடி இதன் நீட்சியாக இருக்கக்கூடும்.
   மிலிட்டரிக்காரர்கள் இள வயதிலேயே அதாவது 40,45 போன்ற வயதுகளில் ஓய்வு பெறுபவர்கள். ஊர்வந்த பிறகு ஓய்வில் என்ன செய்யலாம்? என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கையில் தாங்கள் கற்ற வித்தைகளை மொத்தமாக இறக்குவதற்காக சிலர் ஹோட்டல் ஆரம்பித்தனர் .ஆரம்ப காலகட்டங்களில் அவை மிலிட்டரி ஹோட்டல்கள் என்று பெயர் இல்லாவிட்டாலும் அனைவராலும் அது மிலிட்டரிகாரர் ஹோட்டல் என்று அழைக்கப்பட்டது.பின்னர் இவை பிரபலமானதும் மிலிட்டரி ஹோட்டல் என்பது பெயர்ப்பலகைகளில் கட்டாயமாக இடம்பெறத் தொடங்கியது.
   முப்படைகளின் பரிச்சயம் கொண்ட அவர்கள் ஊர்வன,பறப்பன, நீந்துவன என அனைத்தையும் வழங்கத் தொடங்கினர்.சப்பாத்தி,பரோட்டா எனும் உணவுகளோடு அந்த சேர்க்கையை மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.

    இட்லி தோசை பொங்கல் என்று ஒரே வகை உணவுகளை உண்டு சலிப்படைந்த நம் மக்கள் பரோட்டா சப்பாத்தி சிக்கன் சுக்கா போன்ற உணவுகளை முயற்சிக்க தொடங்கினர். இட்லி தோசை நிறைந்த இம் மண்ணில் பரோட்டா சப்பாத்திகளைப் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு அசைவ ஹோட்டல்கள் என்றால் மிலிட்டரி ஹோட்டல் என்ற ஒரு நிலை உருவானது.
சப்பாத்திகளை மிலிட்டரிகாரர்கள் தவிர்த்து சர்க்கரை வியாதிக்காரர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். இவ்வகையில் இவர்களும் மிலிட்டரி ஹோட்டல்களை நாடத் தொடங்கினர்.
அந்தக்காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன. அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின.

  விடுமுறைக்கு வந்திருக்கும் மிலிட்டரிகாரர்கள் வீட்டில் அசைவம் இல்லாதபொழுது அவர்கள் நாடுவது மிலிட்டரி ஹோட்டல்களைத்தான். திரவ உணவாக மிலிட்டரி ரம் பருகியவர்களின் திட  உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மிலிட்டரி ஹோட்டல்களே. குடிகாரர்களின் மன்னிக்கவும் மதுப்பிரிய‌ர்களின் மனங் கவர்வதும் இந்த மிலிட்டரி ஹோட்டல்கள் தான்!
இப்பொழுதெல்லாம் ஹோட்டல்களில் பரோட்டாக்களின் அணிவகுப்பு நடக்கின்றன. நாட்டுக்காக போராடியவர்களின் மிலிட்டரி ஹோட்டல்களில் நாட்டுக் கோழியுடன் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சாதத்தில் பதுங்குகுழிகள்..சால்னா எல்லை தாண்டுகிறது..வழிந்து ஓடாமல் வாய்க்குள் போர் நடத்தும் வாடிக்கையாளர்கள் கண்கொள்ளாக் காட்சிதான் காணக் கிடைக்கின்றன‌.
ஜெய்ஹிந்த்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கபீம் குபாம் கீச்சுக்கள்

ஊரடங்கு காலத்தில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என எண்ணம் தலைதூக்கியதில் மின்னூல் வெளியிடும் எண்ணம் உருவானது. இந் நூல் கிண்டில் அன்லிமிட்டெடில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. நன்றி. நூலுக்கான‌ லிங்க் https://www.amazon.in/dp/B08817Y63B

எங்க ஊரும்......செல்போனும்.......

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் ( தி கிரேட் தேத்தாகுடி ,வேதாரண்யம் ) உலவத் தொடங்கியது . அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள் , விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............ எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே .பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது .. அதை அவர்கள் , என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர் . எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை ஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர். அருகில் டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை . விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி , வெட்ட வெளிகளில் சிக்னல் பெற்றனர் . ...

பெரிதினும் பெரிது கேள்!

       போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழைய வாக்கு.யாரு சார் இப்ப போதும்னெல்லாம் நினைக்கிறாங்க? அத்தனைக்கும் ஆசைப்படு,பெரிதினும் பெரிது கேள்,திங்க் பிக் இப்படித்தானே எல்லோரும் சொல்லிட்டிருக்காங்க. கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடங்கி நிறைய பெரிதினும் பெரிதுகள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.           மிஷ்கின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பர்த்ததாகவும் நந்தலாலா படத்தின் இசையை 10000 முறை கேட்டதாகவும்,50000 புத்தகங்களை வாசித்ததாகவும்,பீத்தோவனின் சிம்பொனி இசையை 1000 முறை கேட்டதாகவும் சொல்கிறார்.இது பெரிதினும் பெரிதினும் பெரிது என்றுதான் தோன்றுகிறது.   தமிழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு காணொளியில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு 17 ஆயிரம் அத்தைகள் இருந்ததாகவும்,ராஜு முருகனுக்கு 106 சித்திகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ஆல‌ம் விழுதுகள் போல்உறவு 'ஆயிரம்' வந்தும் என்ன' என்று கண்ணதாசன் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் பாடியிருக்கிறார். அதனுடைய நீட்சி...