முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கபீம் குபாம் கீச்சுக்கள்



ஊரடங்கு காலத்தில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என எண்ணம் தலைதூக்கியதில் மின்னூல் வெளியிடும் எண்ணம் உருவானது.



இந் நூல் கிண்டில் அன்லிமிட்டெடில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

நன்றி.

நூலுக்கான‌ லிங்க்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்க ஊரும்......செல்போனும்.......

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் ( தி கிரேட் தேத்தாகுடி ,வேதாரண்யம் ) உலவத் தொடங்கியது . அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள் , விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............ எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே .பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது .. அதை அவர்கள் , என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர் . எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை ஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர். அருகில் டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை . விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி , வெட்ட வெளிகளில் சிக்னல் பெற்றனர் . ...

பெரிதினும் பெரிது கேள்!

       போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்பது பழைய வாக்கு.யாரு சார் இப்ப போதும்னெல்லாம் நினைக்கிறாங்க? அத்தனைக்கும் ஆசைப்படு,பெரிதினும் பெரிது கேள்,திங்க் பிக் இப்படித்தானே எல்லோரும் சொல்லிட்டிருக்காங்க. கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடங்கி நிறைய பெரிதினும் பெரிதுகள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.           மிஷ்கின் செவன் சாமுராய் படத்தை ஐந்தாயிரம் முறை பர்த்ததாகவும் நந்தலாலா படத்தின் இசையை 10000 முறை கேட்டதாகவும்,50000 புத்தகங்களை வாசித்ததாகவும்,பீத்தோவனின் சிம்பொனி இசையை 1000 முறை கேட்டதாகவும் சொல்கிறார்.இது பெரிதினும் பெரிதினும் பெரிது என்றுதான் தோன்றுகிறது.   தமிழத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்படும் எழுத்தாளர் பவா செல்லத்துரை ஒரு காணொளியில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு 17 ஆயிரம் அத்தைகள் இருந்ததாகவும்,ராஜு முருகனுக்கு 106 சித்திகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.ஆல‌ம் விழுதுகள் போல்உறவு 'ஆயிரம்' வந்தும் என்ன' என்று கண்ணதாசன் உன் கண்ணில் நீர் வழிந்தால் பாடலில் பாடியிருக்கிறார். அதனுடைய நீட்சி...